சரக்கு மற்றும் சேவை வரி வரைவு சட்ட சாராம்சம்,
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மீதான முதல் சட்ட வரைவு நகல் 14.6.2016 அன்று மத்திய நிதித் துறை அமைச்சர் திரு அருண் ஜேட்லி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரி மூன்று அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்.
மத்திய அரசினால் விதிக்கப்படுகின்ற வரி CGST
மாநில அரசினால் விதிக்கப்படுகின்ற வரி SGST
மத்திய அரசினால் விதிக்கப்படுகின்ற IGST
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை
வரி
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று பெற வருமான வரித்துறையின் நிரந்தர கணக்கு எண் PAN கட்டாயம் இருக்க வேண்டும்.
வருடாந்திர மொத்த வணிகத் தொகை ரூபாய் 9 லட்சத்திற்கு மேற்பட்டால் 30 நாட்களுக்குள் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவுச் சான்று பெற வேண்டும். எந்த மாநிலத்தில் சரக்குகள் விற்பனை செய்யப்படுகின்றதோ அல்லது சேவைகள் அளிக்கப்படுகின்றதோ அந்த மாநிலத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பதிவுச் சான்று பெற வேண்டும்.
ஏற்கனவே பிற சட்டங்களின் கீழ் பதிவுச் சான்று பெற்றுள்வர்களுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் தற்காலிக பதிவுச்சான்று வழங்கப்படும். அந்த தற்காலிக பதிவுச் சான்று 6 மாதங்களுக்கு செல்லத்தக்கது. தற்காலிக பதிவுச் சான்று வைத்துள்ள அனைவரும் 6 மாத காலத்திற்குள் முறையாக தகவல்கள் தாக்கல் செய்த பின்னர் நிரந்தர பதிவுச்சான்று வழங்கப்படும்.
உள்மாநிலத்தில் (விற்பனை) விநியோகிக்கப்படும் பொருட்கள் மற்றும் உள்மாநிலத்தில் வழங்கப்படும் சேவைகள் அனைத்துக்கும் மத்திய அரசினால் விதிக்கப்படுகின்ற வரியும் மாநில அரசினால் விதிக்கப்படுகினற வரியும் (CGST AND SGST) செலுத்த வேண்டும்.
ஆன்-லைன் முறையில் மேற்கொள்ளப்படும் இ-காமர்ஸ் வணிக மற்றும் சேவை நிறுவனங்கள் பொருள் விற்பனை அல்லது சேவைகள் வழங்கல் ஆகியவற்றுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் பண வரவு அல்லது பணப்பட்டுவாடா செய்யும் சமயம் வரி வசூல் செய்ய வேண்டும்.
ஒரு வருடத்தின் மொத்த விற்பனைத் தொகை ரூபாய் 50 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் காம்பவுண்டிங் முறையில் நிர்ணயிக்கப்படும் குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது ஒரு சதவிகிதத்திற்கு குறையாமல் வரி செலுத்தவேண்டும். (தற்போது மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் கம்பவுண்டிங் முறையில் அரை சதவிகிதம் மட்டுமே).
வெளிமாநிலங்களுக்கு விற்பனை அல்லது சேவைகள் வழங்குபவர்களுக்கு கம்பவுண்டிங் முறையில் செலுத்த அனுமதியில்லை.
ஒரே பான் கார்டு எண் பல நிறுவனங்களுக்கு உபயோகப்படுத்தப்படுமாயின் அந்த நிறுவனங்களுக்கு கம்பவுண்டிங் முறையில் வரி செலுத்த அனுமதியில்லை.
வருடாந்திர மொத்த வணிகத் தொகை ரூபாய் 10 லட்சத்திற்கு மேற்பட்டால் வரி செலுத்த வேண்டும்.
சரக்கு வாணிபம் செய்பவர்கள் சட்டம் அமுலுக்கு வந்த 30 நாட்களுக்குள் பதிவுச் சான்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும.;
தற்காலிக வணிகர்களுக்கு கொடுக்கப்படும் தற்காலிக பதிவுச் சான்று 90 நாட்களுக்கு மட்டும் செல்லத்தக்கதாக இருக்கும். தற்காலிக பதிவுச் சான்று பெறும் சமயம் உத்தேச நமூனாவுடன் முன் வரித் தொகையினை டெபாசிட் செய்ய வேண்டும். தற்காலிக வணிகர்கள் காலகெடு முடிந்த பின்னர் நீட்டிப்பு தேவைப்படின் கூடுதல் டெபாசிட் செலுத்த வேண்டும்.
படிவங்கள் தாக்கல் செய்தல்
மாதாந்திர விற்பனை அடிப்படையில் வரி செலுத்துவோர் மாதம் முடிந்த 10 நாட்களுக்குள் சரக்கு விற்பனை அல்லது சரக்கு மாற்றம் தொடர்பான விவரங்களை இ-பைலிங் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சரக்குகள் விற்பனை பதிவேற்ற அடிப்படையில் ஒவ்வொரு வணிகரும் மேற்கொண்ட சரக்கு கொள்முதல் விவரங்கள் தாமாக இணையதளத்தில் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு வணிகராலும் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் விவரங்கள் அவரவரது கொள்முதல் கணக்கில் தெரிய வரும். கொள்முதல் செய்த வணிகர்கள் ஒவ்வொருவரும் தமக்கு விற்பனை செய்த வணிகர்கள் தமக்கு விற்பனை செய்த விவரங்கள் சரியாக இருக்கின்றதா எனச் சரி பார்க்க வேண்டும். உள்ளீட்டு வரியினை 15 ஆம் தேதிக்குள் சரி பார்க்க வேண்டும்.
மாதாந்திர கொள்முதல் மற்றும் விற்பனை விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்த பின்னர் கொள்முதலுக்கான உள்ளீட்டு வரி வரவினை ஈடு செய்த பின்னர் செலுத்த வேண்டிய வரித்தொகையினை குறிப்பிட்டு மாதாந்திர நமூனாவினை 20 ம் தேதிக்குள் இ-பைலிங் செய்து இ-பேமண்ட் மூலம் வரி செலுத்தி அதன் நகலை வரி விதிப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாதாந்திர சேவைகள் அடிப்படையில் வரி செலுத்துவோர் மாதம் முடிந்த 13 நாட்களுக்குள் சேவைகள் வழங்கியது தொடர்பான விவரங்களை இ-பைலிங் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கம்பவுண்டிங் முறையில் வரி செலுத்துவோர் மூன்று மாதங்களுக்கான நமூனாவினை காலாண்டு முடிந்த 18 நாட்களுக்குள் இ-பைலிங் முறையில் பதிவேற்றம் செய்து உரிய வரியினை செலுத்த வேண்டும்.
வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்கள் நிதியாண்டு முடிந்தவுடன் டிசம்பர் 31 தேதிக்குள் இ-பைலிங் முறையில் தாக்கல் செய்து உரிய வரியினை செலுத்த வேண்டும்.
வணிகம் மற்றும் சேவைகள் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு பதிவுச்சான்று இரத்து செய்ய விண்ணப்பித்தாலோ அல்லது பதிவுச் சான்று இரத்து செய்யப்பட்டாலோ குறிப்பிட்ட படிவத்தில் பதிவுச் சான்று இரத்து செய்ய விண்ணப்பித்த அல்லது பதிவுச்சான்று இரத்து செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் எது முன்னதாக வருகின்றதோ அந்த நாளுக்குள் குறிப்பிட்ட படிவத்தில் இறுதி நமூனா (FINAL RETURN) தாக்கல் செய்து உரிய வரியினைச் செலுத்த வேண்டும்.
செலுத்த வேண்டிய வரித் தொகையினை இன்டர்நெட் பாங்கிங் மூலமாகவோ அல்லது கிரடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது NEFT அல்லது RTGS மூலமாகவோ செலுத்தலாம்.
பிரிவு 8 ன் கீழ் முறையில் வரி செலுத்தும் ஒருவர் தொடர்ந்து 3 முறை நமூனா கொடுக்கத் தவறினால் பதிவுச் சான்று இரத்து செய்யப்படும்.
பிரிவு 8 பி-யின் கீழ் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு நமூனா கொடுக்கத் தவறினால் பதிவுச் சான்று இரத்து செய்யப்படும்.
தாமாக முன்வந்து பதிவுச் சான்று பெற்ற பின்னர் 6 மாத காலத்திற்குள் வணிகம் அல்லது சேவைகள் தொடங்காவிட்டால் பதிவுச் சான்று இரத்து செய்யப்படும்.
வரி ஏய்ப்பு செய்யும் வகையில் உண்மைகளை மறைத்து தவறான நமூனாக்கள் தாக்கல் செய்யப்பட்டால் வழங்கப்பட்ட பதிவுச்சான்று முன தேதியிட்டு இரத்து செய்யப்படும். பதிவுச் சான்று இரத்து செய்யப்பட்டாலும் செலுத்த வேண்டிய வரி மற்றும் இதர தொகைகளை செலுத்தித் தான் ஆக வேண்டும்.
பதிவுச் சான்று இரத்து செய்யப்படும் நாளில் வணிகர் அல்லது சேவையாளர் கணக்கில் உள்ள உள்ளீட்டு வரி வரவு (INPUT TAX CREDIT) அல்லது சரக்குகள் விற்பனை செய்யப் பட்டிருந்தால் அதன் காரணமாக எழுகின்ற வரி (OUTPUT TAX) இதில் எது அதிகமோ அதனை கணக்கிட்டு உடனடியாக செலுத்த வேண்டும்.
விரிவான சட்ட வரைவு நகல் மற்றும் விதிகள் பார்வையிட கீழே குறிப்பிட்ட தொடர்பினை அழுத்தவும்
https://ctd.tn.gov.in/documents/10184/21494/Model+GST+Law+-+draft/d7288bae-0ca6-4ff1-b646-83533358ea74?version=1.0
https://ctd.tn.gov.in/documents/10184/21494/Goods+and+Service+Tax+GST+Law++An+overview++draft/45751cfc-dbc4-4459-aa32-090ff874c953?version=1.0
https://ctd.tn.gov.in/documents/10184/21494/Model+GST+Law+-+draft/d7288bae-0ca6-4ff1-b646-83533358ea74?version=1.0
https://ctd.tn.gov.in/documents/10184/21494/Goods+and+Service+Tax+GST+Law++An+overview++draft/45751cfc-dbc4-4459-aa32-090ff874c953?version=1.0