சரக்கு மற்றும் சேவை வரி
எளிய தமிழில் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்
“ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை” என்னும் தாரக மந்திரத்துடன் 1.7.2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமுலுக்கு வரவிருக்கின்றது.
ஒரு சரக்கு உற்பத்தியாகி சந்தைக்கு வருமுன்னர் மத்திய அரசினால் கீழ்க்காணும் வரிகள் மற்றும் தீர்வைகள் விதிக்கப்பட்டு வந்தன.
மத்திய கலால் வரி
கலால் வரி (மருத்துவ மற்றும் ஒப்பனைத் தயாரிப்புக்கள்)
கூடுதல் கலால் வரி (விசேஷ முக்கியத்துவம் வாய்ந்த சரக்குகள்)
கூடுதல் கலால் வரி (துணிகள் மற்றும் துணிச் சரக்குகள்)
சுங்கத்துறையின் கூடுதல் சுங்க வரி (CVD)
சுங்கத்துறையின் சிறப்பு கூடுதல் சுங்க வரி (SAD)
சேவை வரி
சரக்குகள் மற்றும் சேவைகள் விநியோகம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் மத்திய மிகைவீத வரி மற்றும் உபரி வரி
(மத்திய அரசினால் விதிக்கப்படும் வரிகள் மற்றும் தீர்வைகள்
உள்ளடக்கிய சரக்கு)
உற்பத்தியான சரக்கு விற்பனைக்கு வருமுன்னர் மாநில அரசுகளால் கீழ்க்காணும் வரிகள் விதிக்கப்படடு வந்தன.
மதிப்புக் கூட்டு வரி
மத்திய விற்பனை வரி
நுழைவு வரி
கொள்முதல் வரி
சரக்குகள் மற்றும் சேவைகள் விநியோகம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் மாநில மிகைவீத வரி மற்றும் உபரி வரி.
(மத்திய அரசு மற்றும் மாநில அரசு விதிக்கும் வரிகளுடன் உபயோகிப்பாளருக்கு வருமுன்னர்)
மேற்காணும் சரக்கு உற்பத்தியாகி விற்பனைக்கு வருமுன்னர் மத்திய அரசினால் விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் தீர்வைகளுக்கும் சேர்த்து மாநில அரசு வரி விதித்து உபயோகிப்பாளர்களைச் சென்றடைகின்றது. இவ்வாறு ஒரு சரக்கு உற்பத்தியான பின்னர் மத்திய அரசினால் விதிக்கப்பட்ட வரி மற்றும் தீர்வைகளையும் கொள்முதலில் சேர்த்து மாநில அரசுகள் வரி விதிப்பதினால் வரிக்கு வரி அதாவது மத்திய அரசு விதிக்கும் வரி மற்றும் தீர்வைகளுக்கும் மீண்டும் ஒரு முறை வரி விதித்த பின்னர் உபயோகிப்பாளரைச் சென்று அடைகின்றது. இதனால் உபயோகிப்பாளர்களுக்கு வரிச் சுமை அதிகரிக்கின்றது.
(மத்திய அரசு மற்றும் மாநில அரசு வரிகள் சேர்தது வணிகர்களுக்கான லாபத்துடன்)
இவ்வாறு ஒரு சரக்கு உற்பத்தியாகி மத்திய அரசினால் வரி மற்றும் தீர்வைகள் விதிக்கப்பட்ட பின்னர் மாநில அரசினாலும் மீண்டும் ஒரு முறை வரிக்கு வரி விதிப்பதன் மூலம் ஏற்படுகின்ற வரிச்சுமையினை உபயோகிப்பாளர்களுக்கு குறைக்க வேண்டும் என்ற காரணத்தினால் 1.7.2017 முதல் இந்தியா முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017 அமுலுக்கு வரவிருக்கின்றது.
சரக்கு மற்றும் சேவை வரி என்பது உபயோகப்படுத்தப்படும் இலக்கு சார்ந்து விதிக்கப்படவுள்ள வரியாகும். உற்பத்தியில் தொடங்கி இறுதியாக நுகரப்படும் நிலை வரை உள்ள அனைத்து நிலைகளிலும் வரி விதிக்கப்பட்டு ஆரம்பம் முதல் ஒரு வர்த்தகத்தின் முந்தைய நிலைகள் வரை செலுத்தப்பட்ட வரிகள் அவ்வர்த்தகத்திற்கு வரவு வைக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக மதிப்புக் கூட்டப்படுவதற்கு மாத்திரம் வரி விதிக்கப்படும். அந்த மொத்த வரிச்சுமை இறுதியில் உள்ள உபயோகிப்பாளரைச் சாரும்.
சரக்கு மற்றும் சேவை வரி முழுவதும் உபயோகிப்பாளரே செலுத்துவால் ஒரு உபயோகிப்பாளர் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் அரசன் ஆகின்றார்.
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் கீழ்க் கண்டவாறு வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
1)
பூஜ்ய வரி விகிதம்
2)
5 சதவிகிதம்
3)
12 சதவிகிதம்
4)
18 சதவிகிதம்
5)
28 சதவிகிதம்
6)
28 சதவிகிதத்துடன் செஸ்
மேற்காணும் வரிவிகிதங்கள் இந்தியா முழுவதிலும் மாநிலங்களுக்கு இடையே நிகழும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு எவ்வித வித்தியாசமுமின்றி பொருந்தும். மேற்காணும் வரி விகிதங்களில் சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) பொருந்தும்.
இது வரை மத்திய அரசினால் விதிக்கப்பட்டு வந்த வரிகள் மற்றும் தீர்வைகள் மற்றும் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களால் விதிக்கப்பட்டு வந்த வரிகள் மற்றும் தீர்வைகள் ஒன்றிணைக்கப்பட்டு “சரக்கு மற்றும் சேவை வரி” உருவாக்கப்பட்டுள்ளது. எனவே சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுவதன் மூலம் ஈட்டப்படும் வருவாயினை மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கும் சரிபாதியாக பங்கிட்டு பிரித்துக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு பெறப்படுகின்ற வரி வருவாய் மூன்று வகைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IGST – ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி
CGST – மத்திய சரக்கு மற்றும் சேவை வரி
SGST – மாநில சரக்கு மற்றும் சேவை வரி (அல்லது)
UTGST – யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி
வெளிமாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சரக்கு விநியோகம் மற்றும் சேவைகளுக்கு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டு அந்த வரி வருவாய் மத்திய அரசின் கணக்கில் சேரும். வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு இந்த ஒருங்கிணைந்த சேவை வரி பொருந்தும். (உதாரணமாக தமிழ் நாட்டிலிருந்து ஒரு சரக்கு விநியோகிப்பவர் அல்லது சேவைதாரர் கர்நாடகத்திலுள்ள ஒரு உபயோகிப்பாளருக்கு சரக்கு அல்லது சேவை வழங்குவாரேயானால் தம்ழ் நாட்டிலுள்ள வரி செலுத்துபவர் கர்நாடகத்திலுள்ள உபயோகிப்பாளரிடம் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பார். இதன் மூலம் கிடைக்கப்படும் வரி வருவாய் முழுவதும் மத்திய அரசுக்கு சேர்ந்து விடும்.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி உள்மாநிலத்திலேயே விநியோகிக்கப்படும் சரக்கு அல்லது சேவைகள் மீது விதிக்கப்படும். சரக்கு மற்றும் சேவை வரியானது உபயோகிப்பாளர் சார்ந்த வரியாகும்.
சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். எனவே சரக்கு சேவை வரி விகிதங்களை கீழ்க்கண்டவாறு பிரித்து வரிசெலுத்துதல் மற்றும் வரி விதித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மாநில சரக்கு மற்றும் சேவை வரி
5%
2.5%
2.5%
12%
6%
6%
18%
9%
9%
28%
14%
14%
28% மற்றும் செஸ்
14% மற்றும் செஸ் 14%மற்றும் செஸ்
பூஜ்ய வரி
பூஜ்ய வரி பூஜ்ய வரி
தமிழ் நாட்டிலுள்ள ஒரு வரி செலுத்துபவர் தமிழ்நாட்டிலேயே உள்ள ஒரு உபயோகிப்பாளருக்கு சரக்கு விநியோகம் செய்கின்றார். வரி செலுத்துபவரும் சரக்கு உபயோகிப்பாளரும் ஒரே மாநிலத்திலேயே உள்ளனர். தமிழ் நாட்டிலுள்ள சரக்கு விநியோகம் செய்பவர் உபயோகிப்பாளரிடமிருந்து சரக்கு மற்றும் சேவை வரிஎந்த சதவிகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதில் பாதியினை மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாகவும் மீதி பாதியினை மாநில சரக்கு மற்றும் சேவை வரியாகவும் வசூலிப்பார். சரக்கு விநியோகம் செய்பவர் மற்றும் சரக்கு உபயோகிப்பவர் ஒரே மாநிலத்தில் இருந்தாலும் மத்திய மற்றும் மாநில சரக்கு விற்பனை வரிகளை வசூலிக்க வேண்டும்.
(சுருக்கமாக சொல்வதெனில் ஒரு உபயோகிப்பாளர் சரக்குகளை வெளி மாநில விநியோகஸ்தர்களிடமிருந்து கொள்முதல் செய்தால் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். உள்மாநிலத்திலுள்ள விநியோகஸ்தர்களிடம் கொள்முதல் செய்தால் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். சரக்கினை உள்மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்தாலும் வெளி மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்தாலும் செலுத்தும் வரியினில் எந்த வித வித்தியாசமும் இல்லை விலைகளில் மாத்திரம் மாற்றம் இருக்கலாம் வரி செலுத்துவதில் மாற்றம் இருக்காது).
வரி செலுத்தும் வணிகர்கள் அல்லது சேவைதாரர்கள் உள்ளீட்டு வரியினை கீழ்க்காணும் முறையில் ஈடு செய்தல் வேண்டும்.
IGST
|
CGST
|
SGST
|
IGST
|
CGST
|
SGST
|
CGST
|
IGST
|
IGST
|
SGST
|
----
|
----
|
ஒருங்கிணைந்த வரி செலுத்தும் சமயம் உள்ளீட்டு வரி வருவாயிலிருந்து ஈடு செய்தோ அல்லது ரொக்கமாகவோ செலுத்தலாம். இல்லையெனில் கீழ்க் காணும் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
1.
முதலாவதாக ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து உள்ளீட்டு வரி வரவினை ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிக்கு செலுத்துவதன் மூலம் ஈடு செய்தல் வேண்டும்.
2.
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் உள்ளீட்டு வரி வரவு எதுவும் இல்லையெனில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் உள்ள உள்ளீட்டு வரி வரவினை ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிக்கு ஈடு செய்யலாம்.
3.
ஒருங்கிணைந்த மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றின் கீழ் உள்ளீட்டு வரி வரவு எதுவும் இல்லையென்ற நிலையில் மாநில சரக்கு மற்றும் சேவை வரி உள்ளீட்டு வரி வரவிலிருந்து ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிக்கு ஈடு செய்யலாம்.
4.
இவை அனைத்தும் செய்த பின்னரும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ஏதேனும் செலுத்த வேண்டுமெனில் அதனை ரொக்கமாக செலுத்த வேண்டும். இவ்வாறான முறைகளை சரக்கு மற்றும் சேவைகள் இணைய தளமே நெறிப்படுத்தும்.
சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று
சரக்கு மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று பெறுவதற்கான வரம்பு ரூ. 19 லட்சம். வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஜோரம், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான பதிவுச் சான்று பெறுவதற்கான வரம்பு ரூ. 9 லட்சம். தாமாகவே முன்வந்து சரக்கு மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று பெறலாம்.
கீழ்க் காணும் வகையினைச் சேர்ந்தவர்கள் வர்த்தக வரம்பு எதுவாக இருந்தாலும் கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
1.
மாநிலங்கள் இடையில் வரி விதிப்புக்குட்பட்ட விநியோகம் செய்பவர்கள்
2.
முறைமைக்குட்படாத வரி விதிக்கப்படுபவர்கள் அதாவது தற்காலிக வரி செலுத்துவோர்
3.
நேர்மாறான வரி செலுத்துபவர் அதாவது உள்ளீட்டு வரி வரவினை கணக்கில் எடுத்துக்கொண்டு மீத வரியினைச் செலுத்துவோர்
4.
உள்நாட்டில் வசிக்காத வரி செலுத்துபவர்
5.
பிரிவு 37ன் கீழ் வரி பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்தும் நபர்கள்
6.
ஒரு முகவராகவோ அல்லது வேறு விதத்திலோ பிற பதிவு பெற்ற வரி செலுத்தும் நபர்களுக்காக சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது இரண்டையிம் விநியோகிப்பவர்கள் அதாவது ஏஜண்டுகள்
7.
உள்ளீட்டு சேவை விநியோகஸ்தர்
8.
வியாபாரக் குறியீட்டுடன் சேவை செய்பவர் தவிர்த்து மின்னணு வர்த்தகம் இயக்குபவர் மூலமாக சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது இரண்டும் வழங்கும் நபர்கள்
9.
எல்லாவித மின்னணு வர்த்தகம் இயக்குபவர்கள்
10.
அவருடைய முத்திரை பெயரில், அவருடைய வர்த்தக பெயரில் சேவைகள் விநியோகிக்கும் மொத்த வர்த்தகர்
11.
அமைப்பின் சிபாரிசுகளின்படி மத்திய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கம் குறிப்பிட்ட பிற நபர்கள் அல்லது பிற வகையான நபர்கள்
சரக்கு மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று பெற பதிவுச் சான்றுக் கட்டணம் எதுவும் கிடையாது
இதற்கு முந்தைய சட்டங்களின் கீழ் பதிவுச் சான்று பெற்றுள்ள எந்த ஒரு நபரும் சரக்கு மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் புதிதாக பதிவுச் சான்று பெறத் தேவையில்லை. முந்தைய சட்டங்களின் கீழ் பதிவுச் சான்று பெற்றுள்ளவர் சரக்கு மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் இணைய வழி மூலம் பதிவு செய்து கொண்டால் மட்டும் போதுமானது. இவ்வாறு பதிவு செய்து கொண்டவர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் தற்காலிக பதிவுச் சான்று 6 மாத காலம் செல்லத்தக்க வகையில் இணையதளம் மூலம் வழங்கப்படும். சட்டம் அமுலுக்கு வந்த 6 மாதங்களுக்குள் தேவையான விவரங்கள் கொடுத்தவுடன் மத்திய சரக்கு மற்றும் சேவைகள் வரி மற்றும் மாநில சரக்கு சேவைகள் வரிச் சட்டங்களின் கீழான இறுதியான நிலையான பதிவுச் சான்று வழங்கப்படும்.
சரக்குகள் விநியோகம் என்பது சரக்குகள் விநியோகம் மற்றும்/அல்லது சேவைகளான விற்பனை, மாற்றல், பண்டமாற்று, பரிவர்த்தனை, உரிமம், வாடகை, குத்தகை அல்லது பைசல் செய்தல் அல்லது ஒப்புக்கொள்ளுதல் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கும். அதில் சேவை இறக்குமதியும் அடங்கும். விநியோக வரம்பிற்குள் பரிசீலிக்கப்படாமல் செய்யப்பட்ட குறிப்பிட்ட பரிவர்த்தனைகளும் சரக்கு மற்றும் சேவைகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு சரக்கு விநியோகம் மற்றும்/அல்லது சேவைகள், பதிலீடு பெற்று செய்யப்படும் விநியோகம் மற்றும்/அல்லது சேவைகள், வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்லும் போக்கில் செய்யப்படும் விநியோகம். வரி விதிப்பு பிராந்தியத்தில் செய்யப்படும் விநியோகம், விநியோகம் என்பது வரிவிதிப்புக்கு உட்பட்ட விநியோகம் மற்றும் வரி விதிப்புக்கு உட்பட்ட நபரால் செய்யப்படுவது ஆகும்.
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் புதிதாக “
வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்லும் போக்கில்” என்னும் வார்த்தைகள் இடம் பெற்று இருக்கின்றது. வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்லும் போக்கில்” என்பதனால் என்ன பயன்? இதற்கு முந்தைய வரிச் சட்டத்தில் ஒரு வணிகர் தாம் கொள்முதல் செய்யும் மிஷினரிகளுக்கு அந்த மிஷினரிகளை உபயோகித்து வரியுள்ள பொருட்கள் உற்பத்தி செய்வாரேயானால் கொள்முதல் செய்யும் மிஷினரிகளுக்கான உள்ளீட்டு வரியில் 50 சதவிகிதத்ததைனை முதலாவது நிதியாண்டிலோ எஞ்சியுள்ள 50 சதவிகித உள்ளீட்டு வரிவரவினை அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு உள்ளாகவோ செலுத்த வேண்டிய வரிக்கு ஈடு செய்ய முடியும். கொள்முதல் செய்யப்பட்ட மிஷினரிகளைக் கொண்டு வரி இல்லாத அல்லது வரி விலக்குடைய பொருட்களை உற்பத்தி செய்வாரேயானால் கொள்முதல் செய்த மிஷினரிகளுக்கான உள்ளீட்டு வரி வரவினை ஈடு செய்ய முடியாது. ஆனால் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் ஒரு சரக்கு டெலிவரி செய்யும் வாகனம் கொள்முதல் செய்தாலும் கூட அதற்கான உள்ளீட்டு வரி வரவினை வாகனம் கொள்முதல் செய்த அந்த நிதி ஆண்டிலேயே செலுத்த வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ஈடு செய்ய முடியும். முந்தைய சட்டங்களில் இருந்தது போல வரியுள்ள சரக்குகள் உற்பத்தி செய்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதே போல வாணிபம் தொடர்பாக நாம் வெளியூர்களுக்கு சென்று தங்கும் விடுதிகளில் தங்க நேரிடும். அவ்வாறான சமயங்களில் நமது பயணச் சீட்டில் மற்றும் நாம் தங்கியிருந்த விடுதியில் பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்தப்பட்ட உள்ளீட்டு வரி வரவினை நமது கணக்கில் எடுத்து செலுத்த வேண்டிய வரியில் கழித்துக்கொள்ள முடியும். அதே போல நமக்கு சரக்குகள் வாகனம் மூலம் கொண்டுவரப்படும் சமயம் நாம் செலுத்தும் சேவைக்கட்டணம் மற்றும் சரக்குக்கு இன்ஸ்யூர் செய்திருந்தால் இன்சுரன்சுக்கான சேவைக் கட்டணம் ஆகியவற்றையும் நமது கணக்கில் உள்ளீட்டு வரி வரவாக எடுத்துக்கொண்டு செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழித்துக்கொள்ள முடியும். ஆனால் இவைகள் அனைத்துக்கும் அந்தந்த பட்டியல்களில் நமது வணிக நிறுவனம் அல்லது சேவை நிறுவனத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்று எண் கட்டாயம் குறிப்பிட்;டு இருக்க வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் ஒத்திசைவான அமைப்புக் குறியீடு
HSN CODE
UNDER GST
இது வரை அமுலில் இருந்த வரி விதிப்புச் சட்டங்களில் பொருட்களுக்கான குறியீட்டு எண் இருந்தது. இவ்வாறான குறியீட்டு எண்கள் ஒவ்வொரு பொருளுக்கும் வேறு வேறாக இருக்கும் அதே போல ஒரு பொருளுக்கான குறியீட்டு எண் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அதே போல வரி விதிப்பு சதவிகிதமும் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு படும். ஒரு பொருளுக்கு ஒரு மாநிலத்தில் வரி விலக்கும் கொடுக்கப்படும் அதே பொருளுக்கு இன்னொரு மாநிலத்தில் இன்னொரு வரி விகிதத்தில் வரி விதிக்கப்படும். இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்புச் சட்டம் அமுலுக்கு வரவிருப்பதால் ஒரு பொருளுக்கு ஒரே குறியீட்டு எண்ணை குறிப்பதன் மூலம் ஒரே மாதிரியான ஒரே சீரான ஒரே சதவிகிதத்தில் வரி விதிக்க இயலும். எனவே இந்தியா முழுவதும் HSN கோடு என்னும் குறியீட்டினை சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் அமுல் படுத்த உத்தேசிக்கப்பட்டது. இந்த குறியீட்டு எண் உலகம் முழுவதும் பின்பற்றப்படுவதால் யார் வேண்டுமானாலும் இந்த குறியீட்டுக்கு இந்த பொருள் என எளிதில் கண்டறிய முடியும்.
சரக்கு மற்றும் சேவை வரியில் வரி விலக்கு வரம்பு
வரி விலக்குக்கான வருடாந்திர மொத்த தொகை
ரூ. 20 லட்சம்
அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர்,
மேகாலயா, மிஜோரம், நாகாலாந்து, சிக்கிம்
மற்றும் திரிபுரா ஆகிய வடகிழக்கு
மாநிலங்களுக்கு
ரூ 10 லட்சம்
சரக்கு மற்றும் சேவை வரிக்கான படிவங்கள் தாக்கல் செய்தல்
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் மூன்று வகைகளில் விநியோகஸ்களும் சேவைதாரர்களும் படிவங்கள் தாக்கல் செய்ய முடியம்.
1)
மாதாந்திரம்
2)
காலாண்டு
3)
வருடாந்திரம்
தாம் கொள்முதல் செய்யும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு உள்ளீட்டு வரி வரவினை ஈடு செய்ய வேண்டுமெனில் மாதாந்திர படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.
உள்ளீட்டு வரி வரவினை ஈடு செய்ய விரும்பாதவர்கள் காலாண்டுக்கு ஒரு முறை படிவம் தாக்கல் செய்யலாம் சில குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு.
பிரிவு 37ன் கீழ் வரி பிடித்தம் செய்பவர்கள் மற்றும் இந்தியாவில் இருப்பிடமாக கொள்ளாதவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை படிவம் தாக்கல் செய்யலாம்.
சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்கள்
TYPE OF TAXPAYER
|
TYPE OF RETURNS TO BE FILED
|
Regular
Taxpayer
|
GSTR 1
GSTR 1A
GSTR 2
GSTR 2A
GSTR 3
GSTR 3A
GSTR ITC-1
GSTR
9
|
Composite
Taxpayer
|
GSTR 4
GSTR 4A
GSTR
9A
|
Foreigner
– Non-resident Taxpayer
|
GSTR
5
|
Input
Service Distributor
|
GSTR 6
GSTR
6A
|
Tax Deductor (TDS Return)
|
GSTR 7
GSTR 7A
|
E Commerce
|
GSTR 8
|
Aggregate Turnover
|
GSTR 9B
|
Final Return – For taxable person whose registration
has been surrendered or cancelled
|
GSTR 10
|
யார் யார் எந்தெந்த தேதிகளில் எந்த வகையான படிவங்கள் தாக்கல் செய்ய வேண்டும்
Return
Form
|
Details to be furnished
|
Who has to file return
|
Period
|
Due Date for filing
|
GSTR 1
|
Details of outward supplies of taxable goods and /
or services effected
|
Registered taxable Supplier
|
Monthly
|
10th of the succeeding month
|
GSTR
1A
|
Details of outward
supplies as added, corrected or deleted by the recipient
|
Registered taxable Supplier
|
Additions deletions or corrections if any furnished
in Form GSTR 1 should be made in Form GSTR 1A
|
11TH of the succeeding month
|
GSTR 2
|
Details of inward
supplies of taxable goods and/or services claiming input tax credit
|
Registered taxable Recipient
|
Monthly
|
15th of the succeeding month
|
GSTR
2A
|
Auto populated details
of inward supplies made available to the recipient on the basis of FORM
GSTR-1 furnished by the supplier
|
Registered taxable Recipient
|
Additions deletions or corrections if any
in the auto populated details of inward supplies made available to the
recipient on the basis of GSTR furnished in Form GSTR 1 furnished by the
supplier should be made in Form GSTR 2A
|
Before
15th of the succeeding month (in Form GSTR 2)
|
The
assessee is required to verify, validate, modify or even delete the details
furnished by the suppliers.
|
GSTR 3
|
Monthly return on the
basis of finalization of details of outward supplies and inward supplies
(auto populated) along with the
payment of amount of tax
|
Registered taxable Person
|
Monthly
|
20th of the succeeding month
|
GSTR
3A
|
Notice to a registered
taxable person who fails to furnish return under section 27 and section 31
|
By the Tax Authority i.e. proper officer
|
--
|
On
receipt of notice from the Department the Taxpayer file returns within 15
days of receipt of notice
|
GSTR 4
|
Quarterly Return for
compounding Taxable persons
|
Composition dealer
|
Quarterly
|
18th of the month succeeding quarter
|
GSTR 4A
|
Auto populated details
of inward supplies made available to the recipient on the basis of FORM
GSTR-1 furnished by the supplier (quarterly)
|
Composition dealer
|
Quarterly
|
The
assessee is required to verify, validate, modify or even delete the details
furnished by the suppliers every month.
|
GSTR 5
|
Details of imports, outward supplies, ITC availed,
tax paid, and closing stock details
|
Non-Resident Taxable Person (Foreigner)
|
Monthly
|
The
assessee is required to verify, validate, modify or even delete the details
furnished by the suppliers.
|
Expiry of Registration
|
Within
7 days after expiry of registration.
|
GSTR 6
|
ISD return. Details of
input credit distributed.
|
Input Service Distributor
|
Monthly
|
13th of the succeeding month
|
GSTR 6A
|
Details of inward
supplies made available to the ISD recipient on the basis of FORM GSTR-1
furnished by the supplier
|
Registered taxable Input Service
Recipient
|
Additions deletions or corrections if any in the
auto populate details of inward supplies made available to the recipient on
the basis of GSTR furnished in Form GSTR 1 furnished by the supplier should
be made in Form GSTR 6A
|
11th of the succeeding month
|
GSTR 7
|
Return for authorities
deducting tax at source
|
Tax Deductor
|
Monthly
|
10th of the succeeding month
|
GSTR 7A
|
TDS Certificate to be
made available for download
|
TDS Certificate – capture details of value on which
TDS is deducted and deposit on TDS deducted into appropriate Government
|
Monthly
|
..
|
GST - ITC-1
|
Communication of
acceptance, discrepancy or duplication of input tax credit claim
|
|
|
|
GSTR 8
|
Details of supplies
effected through e-commerce operator and the amount of tax collected on
supplies as required under sub-section (1) of section 43C
|
E-commerce
Operator / Tax Collector
|
Monthly
|
10th of the succeeding month
|
GSTR 9
|
Annual
Return
|
Registered Taxable Person
|
Annual
|
31st
December of next financial year
|
Input Service distributor, deductor of
tax, casual taxable person and Non-Resident taxable person are not required
to furnish annual return.
|
GSTR
9A
|
Simplified Annual
return by Compounding taxable persons registered under section 8
|
Composition dealer
|
Annual
|
31st
December of next financial year
|
GSTR
9B
|
Reconciliation
Statement – audited annual accounts and a reconciliation statement, duly
certified
|
By Taxpayers whose aggregate turnover exceeds 1
crore in a year
|
Annual
|
31st
December of succeeding year.
|
GSTR
10
|
Final return with
details of inputs and capital goods held tax paid and payable.
|
Taxable person whose registration has been
surrendered or cancelled
|
Monthly
|
Within
three months of the date of cancellation or date of cancellation order,
whichever is later.
|
GSTR
11
|
Details of inward
supplies to be furnished by a person having UIN
|
Person having UIN and claiming refund and Government
Departments
|
Monthly
|
28th
of the month following the month for which statement is filed
|
குறிப்பிட்ட சரக்கு மற்றும் சேவைகளுக்கு சில குறிப்பிட்ட
சமயங்களில் விதிக்கப்படுகின்ள வரி விகிதங்கள்
இது வரை நடைமுறையில் இருந்த வரி விதிப்புச் சட்டங்களில் வரி விதிப்பு அட்டவணைகளில் சில பொருட்களின் கீழ்
“உதிரி பாகங்கள் மற்றும் உபரி பாகங்கள்” என குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்வாறான உதிரி மற்றும் உபரி பாகங்களுக்கு அட்டவணையில் எந்த சரக்குகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த சரக்குகளுக்கான வரி விகிதம் வசூலிக்கப்படும்.
சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் மூன்று வகையான விநியோகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1)
முக்கிய பொருள் விநியோகம் (Principal Supply)
2)
ஒருங்கிணைந்த விநியோகம் (Composite Supply)
3)
கலப்பு விநியோகம் (Mixed Supply)
ஒரு உபயோகிப்பாளர் ஒரு வரிசெலுத்தும் நிறுவனத்திற்கு சென்று ஒரு பொருளை வாங்கி அந்த இடத்திலேயே பொருளை பெற்றுக் கொள்வாரேயானால் அந்த வகையான வணிகம் முக்கிய பொருள் விநியோகமாகும். அதற்கு சரக்கு மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் படி வரி விதிக்க முடியும்.
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் சரக்கு அல்லது சேவை அல்லது இரண்டும் சேர்த்து விநியோகம் செய்பவர் சரக்கு அல்லது சேவை சரக்கு அல்லது சேவை பெறுபவரது சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிவு எண்ணை குறிப்பிட்டால் மட்டுமே உள்ளீட்டு வரியினை ஈடு செய்ய முடியும்.
(B2B i.e. Business to Business) தவறினால் அந்த விநியோகம் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் படி பதிவு பெறாதவருக்கு
(B2C i.e. Business to Consumer) வழங்கியதாக கருதப்படும். உள்ளீட்டு வரி வரவை ஈடு செய்ய முடியாது.
இது தவிர சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விநியோகம் மற்றும் கலப்பு விநியோகம் என இரண்டு வகையான விநியோகம் தனியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டிற்குமான வித்தியாசத்தை காண்போம்.
ஒருங்கிணைந்த விநியோகம்
Section 2 (30): “composite supply” means a supply made by
a taxable person to a recipient consisting of two or more taxable supplies of
goods or services or both, or any combination thereof, which are naturally
bundled and supplied in conjunction with each other in the ordinary course of
business, one of which is a principal supply;
Illustration: Where goods are packed and transported with
insurance, the supply of goods, packing materials, transport and insurance is a
composite supply and supply of goods is a principal supply
ஒரு உபயோகிப்பாளர் ஒரு குளிர் சாதன கருவியினை கியாரண்டியுடன் கொள்முதல் செய்து அந்த குளிர் சாதன கருவியினை சரக்கு விநியோகஸ்தர் தமது வாகனத்தில் கொண்டுவந்து கொள்முதல் செய்தவரது இல்லத்தில் பொறுத்திவிட்டு செல்கின்றார். இந்த நிகழ்வில் சரக்கு விநியோகம் மற்றும் சேவை இரண்டும் உள்ளன. இவ்வாறான நிகழ்வில் குளிர்சாதனத்திற்கு என்ன சதவிகித வரியோ அதே வரி விதிதத்தினை பிறவற்றுக்கும் சேர்த்து வசூலிக்கின்றார். கியாரண்டியும் வருடாந்திர பராமரிப்பும் சரக்குடன் கொடுக்கப்படாத நிலையிலும் குளிர் சாதன கருவி விநியோகத்தின் போது விலையுடன் சேர்க்கப்படுவதால் இவ்வகையான நிகழ்வு ஒருங்கிணைந்த விநியோகமாக கருதப்படும். (குளிர் சாதன கருவி கியாரண்டி காலத்திற்குள் எதுவும் பழுது ஏற்படவில்லையெனில் நாம் செலுத்திய கியாரண்டிக்கான சேவைக் கட்டணத்தை திரும்பப் பெற முடியாத காரணத்தால் இது
“composite supply” என்னும் வரையரைக்குள் வருகின்றது.
கலப்பு விநியோகம்
Section 2(74): “mixed supply” means two or more
individual supplies of goods or services, or any combination thereof, made in
conjunction with each other by a taxable person for a single price where such
supply does not constitute a composite supply.
Illustration: A supply of a
package consisting of canned foods, sweets, chocolates, cakes, dry fruits,
aerated drinks and fruit juices when supplied for a single price is a mixed
supply. Each of these items can be supplied separately and is not dependent on
any other. It shall not be a mixed supply if these items are supplied
separately..
நாம் தற்போது கீழே குறிப்பிட்டவாறு நிறைய இலவசப் பொருட்கள் என காணுகின்றோம்.
•
குக்கருடன் தாவா
•
குளிர் சாதன பெட்டியுடன் பயணப்பை
•
கையடக்க தொலை பேசியுடன் மெமரி கார்டு
•
கம்ப்யூட்டருன் யூபிஎஸ்
•
வாஷிங் மிஷினுடன் மடக்கக்கூடிய பை
•
மெத்தையுடன் தலையணைகள்
•
செர்ரி பழங்கள் அழகான பெட்டிகளில்
•
பழரசங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில்
•
இனிப்புப் பண்டங்கள் அட்டைபெட்டி / பிளாஷ்டிக் பெட்டிகளில்
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் விலைபோட்டு நாம் வாங்குகின்ற பொருளுக்கும் இலவசமாக இணைப்பாக கொடுக்கப்படுகின்ற பொருட்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. தேவையெனில அவைகளை தனித்தனியே வாங்க முடியும். இவ்வாறு ஒன்றுக்கொன்று தொடாபில்லாத பொருட்களையோ அல்லது சேவைகளையோ ஒன்று சேர்த்து விநியோகம் செய்வோமேயானால் இலவசமாக வழங்கப்படும் பொருட்களுக்கு விலை ஏதும் இல்லாமல் இருந்தாலும் ஒன்றுக்கொன்று சேர்த்து வழங்கும் பொருட்களில் எந்த பொருளுக்கு வரிவிகிதம் அதிகமோ அந்த பொருளுக்கான வரி முக்கிய பொருளுக்கும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும்.

எனவே ஒரு முக்கிய பொருள் விற்பனை செய்யும் சமயம் இலவச இணைப்பாக வேறு ஒரு பொருளை கொடுக்க வேண்டுமெனில் முக்கிய பொருள் மீதான வரிவிகிதம் எதுவோ அந்த வரி விகிதத்தில் உள்ள பொருட்களையோ அல்லது அதைவிட குறைவான வரி விகிதம் உள்ள பொருட்களையோ சேர்த்து வழங்கினால் அதிகப்படியாக விதிக்கப்படக்கூடிய வரி விதிப்பிலிருந்து தப்பிக்கலாம். சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் படி பூஜ்ய வரி அதாவது வரியில்லாத பொருட்களைக் கூட வரியுள்ள பொருட்களுடன் சேர்த்து இலவசமாக வழங்கினால் இலவச பொருட்களுக்கும் வரி செலுத்த நேரிடும்.
சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ்
ஒரே பொருளுக்கு வேறு வேறு வரி விகிதங்கள்
கலப்பு விநியோகத்தின் சமயம் முக்கிய பொருளுக்கு என்ன வரி விகிதமோ அந்த வரி விகிதம் உபரி பொருட்களுக்கும் பொருந்தும்.
அதே போல பேரிச்சம்பழம், மாம்பழம் போன்றவை அப்படியே விநியோகம் செய்தால் பூஜ்ய வரி விகிதமும் உலர்ந்த நிலையில் விற்பனை செய்தால் 12 சதவிகித வரியும் விதிக்கப்படும்
(HSN CODE:0804)
திராட்சை பழத்திற்கு பூஜ்ய வரி விகிதமும் உலர்ந்த திராட்சைக்கு 12 சதவிகித வரியும் விதிக்கப்படும்
(HSN.0806) இன்னும் சில.
சில பொருட்களுக்கு அந்த நிலைக்கேற்ற வரி விதிக்கப்படும்
(HSN
CODE 12.1201 TO 12.1213) அல்லது வரிவிலக்கு இருக்கும்.
சில பொருட்களுக்கு ஒரே குறியீட்டு எண் இருந்தாலும் வரிவிகிதம் வேறு படக்கூடிய நிலை உள்ளது. பூஜ்ய வரி விகிதம் அதாவது வரிவிலக்கு உள்ள பொருட்களை அட்டைப்பெட்டிகளிலோ அல்லது பிளாஷ்டிக் பெட்டிகளிலோ விநியோகம் செய்தால் வரி செலுத்த வேண்டும்.
சரக்கு மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் விநியோக இடம்
இப்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின் படி ஒரு வணிகர் யாருக்கு வணிகம் செய்கின்றாரோ அந்த வணிகரின் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை குறிப்பிட்டு பில் போட்டு விட்டால் போதும். அது உள்மாநில விற்பனையாகவும் இருக்கலாம் வெளி மாநில விற்பனையாகவும் இருக்கலாம் ஏற்றுமதியாகவும் இருக்கலாம். வரியுள்ள சரக்காகவும் இருக்கலாம் வரி விலக்கு சரக்காகவும் இருக்கலாம். எந்த இடத்தில் வணிகம் செய்வதற்கு பதிவுச் சான்று பெற்றுள்ளாரோ அந்த இடம் எந்த வரி விதிப்பு சரகத்திற்குள் வருகின்றதோ அந்த சரகத்தில் படிவங்கள் தாக்கல் செய்து வரியினைச் செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்படும் வரி அந்தந்த மாநிலத்திற்கு சேரும்.
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் சரக்கு அல்லது சேவை விநியோகம் அல்லது இரண்டும் சேர்த்து விநியோகம் ஒரு புதிய உத்தி புகுத்தப்பட்டுள்ளது. புதிதாக புகுத்தப்பட்டுள்ள உத்தியினை நடைமுறையில் அமுலுக்கு கொண்டுவர வரி செலுத்துபவர் கொடுக்க வேண்டிய பட்டியல் தன்மை கீழ்க் கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1.
விநியோகம் செய்பவரது சரக்கு மற்றும் சேவை வரி பதிவுச் சான்று எண் மற்றும் விநியோகஸ்தர் பெயர் மற்றும் முழுமையான முகவரி மற்றும் தொடர் வரிசை கொண்ட பில் மற்றும் பில் தேதி
2.
சரக்கு மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியல் பெறுபவரது பெயர், விலாசம், மாநிலம், மாநிலத்தின் குறியீட்டு எண் மற்றும் அவரது சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழான
GSTIN/Unique
ID
3.
சரக்கு மற்றும் சேவைகள் தொடர்பான சரக்கு அல்லது சேவைகள் அல்லது இரண்டும் சேர்த்து பெறுபவரது பெயர், விலாசம், மாநிலம், மாநிலத்தின் குறியீட்டு எண் மற்றும் அவரது சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழான
GSTIN/Unique
ID
தற்போது நடைமுறையில் உள்ள வரிச் சட்டங்களின்படி வரி வருவாய், வணிக நிறுவனம் அமைந்துள்ள இடம் எந்த மாநிலத்தில் இருக்கின்றதோ அந்த மாநிலத்தைச் சாறும். ஆனால் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் சரக்கு அல்லது சேவை எந்த மாநிலத்தில் உள்ள கடைசி உபயோகிப்பாளருக்குச் சென்றடைகின்றதோ அந்த மாநிலத்தைச் சாறும்.
சுருக்கமாக சொல்வதெனில் ஒரு சரக்கு அல்லது சேவை எந்த இடத்தில் கடைசியாக நுகரப்படுகின்றதோ அந்த இடத்திற்கான வரி விதிப்பு அலுவலர் எவரோ அந்த அலுவலர் சரக்கு மற்றும் சேவை வரி வரம்பு அலுவலர் ஆகிறார்.
அதுபோல ஒரு உபயோகிப்பாளர் ஒரு விநியோப்பவர் பதிவு பெற்ற முகவரிக்கு வந்து சரக்கு அல்லது சேவை அல்லது இரண்டும் சேர்த்து பெறுவாரேயானால் பதிவுச்சான்ற பெற்ற இடத்தில் சரக்கு மற்றும் சேவை வழங்கப்பட்டதாக கருத வேண்டும். உதாரணம்: ரொக்க பரிமாற்றம் அனைத்தும்.
பதிவு பெற்ற ஒரு இடத்தில் ஒருவர் சேவைகளைப் பெறுவாராயின் பதிவு பெற்ற இடமே சேவை வழங்கப்பட்ட இடமாக கருதப்படும். உதாரணம் பழுதடைந்த உபகரணங்களை பழுது நீக்கும் இடத்திற்கு கொண்டு சென்று பழுது நீக்கி வருதல்.
ஒரு சரக்கினை அல்லது சேவையினை விநியோகம் செய்த இடத்திலிருந்து வேறு இடத்தில் ஒப்படைத்தாலோ அல்லது மேற்கொண்டாலோ. எந்த இடத்தில் சரக்கு ஒப்படைக்கப்பட்டதோ அல்லது சேவை மேற்கொள்ளப்பட்டதோ அந்த இடம் சரக்கு அல்லது சேவை வழங்கப்பட்ட இடமாக கருதப்படும். உதாரணம்: இருப்பிடத்திற்கு வந்து நிறுவுதல் அல்லது ஒன்று சேர்த்தல் (உபரிகள் மூலம்)
ஒரு சரக்கு அல்லது சேவை அல்லது இரண்டும் சேர்த்து பெறும் உபயோகிப்பாளரும் அவற்றை வழங்கும் விநியோகஸ்தரும் ஒரே மாநிலத்தில் இருந்;தால் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியும் மாநில சரக்கு மற்றும் சேவை வரியும் பொருந்தும்.
உபயோகிப்பாளரும் அவற்றை வழங்கும் விநியோகஸ்தரும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்;தால் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி பொருந்தும்.
அசையாச் சொத்துக்கள் மீதான அதாவது கட்டுமானம், பழுது நீக்கம், மாற்றியமைத்தல் போன்ற இனங்களில் சேவைகள் எந்த இடத்தில் அதாவது அசையாச் சொத்து எங்கு அமைந்துள்ளதோ அந்த இடத்தில் சேவை வழங்கப்பட்ட இடமாக கருதப்படும்.
உணவு விடுதிகள் சமையல் கூடங்கள், அழகு நிலையங்கள், உடல் நலம் பேணும் நிலையங்கள், அழகு சிகிச்சை வழங்கும் இடங்கள், தேக ஆரோக்கியம் தொடர்பான சேவைகள் மற்றும் தோல் தொடர்பான சிகிச்சைகள் அனைத்தும் எந்த இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றதோ அந்த இடம் சேவை வழங்கப்பட்ட இடமாக கருதப்படும்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் யாரால் எந்த பதிவு பெற்ற இடத்திலிருந்து சரக்குகள் மற்றும் சேவைகள் பெறப்பட்டதோ அந்த இடம் சரக்கு அல்லது சேவை வழங்கப்பட்ட இடமாக கருதப்படும்.
மின்னணு உபகரணங்கள் மூலம் இருந்த இடத்திலிருந்து தொலை தூரத்திலுள்ள ஒரு இடத்தில் உள்ள ஒரு உபயோகிப்பாளருக்கு சேவைகள் வழங்கப்பட்டால் சேவை பெறும் சமயம் சேவை பெறும் உபகரணம் எங்கு இருக்கின்றதோ அந்த இடம் சேவை வழங்கும் இடமாக கருதப்படும். உதாரணம் இணைய தளம் மூலம் மென்பொருட்கள் பேணுதல்.
(Example: Updation of Accounts Software and Anti-virus Sofware)
ஒரு இடத்திலிருந்து சரக்குகள் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல படுவதில் (இ-மெயில் மற்றும் கூரியர் தவிர) சரக்கு எங்கு கடைசியாக ஒப்படைக்கப்படுகின்றதோ அந்த இடம் சேவை விநியோகித்த இடமாக கருதப்படும். உதாரணம்: லாரிகள் மூலம் சரக்குகள் விநியோகம்
படிவங்கள் தாக்கல் செய்ய கணக்குகள் பராமரித்தல்
சரக்கு மற்றும் சேவை வரி அமுலுக்கு வந்தால் படிவங்கள் தாக்கல் செய்வதற்கு என்னென்ன கணக்குகள் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களால் நடத்தப்படும் பயிற்சிக்கு செல்கின்றனர்.
பயிற்சி நடத்தி வரும் அனைத்து பயிற்சியாளர்களும் “சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் படிவங்கள் தாக்கல் செய்வது மிகச் சுலபம். சரக்கு மற்றும் சேவைகள் வழங்கிய விவரங்களை அடுத்த மாதம் 10 தேதிக்குள் அதற்கென உரிய படிவம் ஜிஎஸ்டிஆர் 1ல் சரக்கு மற்றும் சேவை வரி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தால் போதும். விநியோகஸ்தர்கள் தமக்கு செய்த சரக்கு விநியோகம் அல்லது சேவை விநியோகம் அல்லது இரண்டும் தாமாகவே தமது கணக்கில் வந்து விடும். சரக்கு மற்றும் சேவைகள் பெறப்பட்ட விவரங்களை 11ந் தேதியிலிலுந்து 15 தேதிக்குள் சரி பார்த்தல் மட்டும் செய்து விடுதல்கள் திருத்தங்கள் சேர்த்தல்கள் எதுவும் இருப்பின் குறிப்பிட்டு 15ந்தேதிக்குள் வரப்பெற்ற சரக்கு மற்றும் சேவைகளை ஒப்புக்கொண்டால் போதும். 20ந் தேதிக்குள் சரக்கு மற்றும் சேவை வரிக்கான முழு படிவமும் கட்டவேண்டிய தொகை எவ்வளவு என்னும் விவரங்களுடன் தயாராகி விடும். 20ந் தேதியன்று படிவத்தை பதிவேற்றம் செய்து கட்டவேண்டிய தொகையினைக் கட்டினால் வேலை முடிந்து விடும்” என சொல்கின்றார்கள்.
இது கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் கடைப்பிடிப்பது மிகவும் கடினம். தற்போது வணிகர்கள் கொள்முதல் விவரங்கள் விற்பனை விவரங்கள் மற்றும் உள்ளீட்டு வரி வரவு அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டால் இருப்புச் சரக்கு விவரம் ஆகியவற்ளை உரிய அட்டவணைகளில் (
Annexure) நிரப்பி பதிவேற்றம் செய்தால் முழுமையான படிவம் தயாராகிவிடும். பதிவுச் சான்று இல்லாதவர்களுக்கும் ரொக்க விற்பனை போன்ற விவரங்களை மாத்திரம் குறிப்பிட்டு பதிவேற்றம் செய்தால் கட்டவேண்டிய தொகையுடன் முழுமையான படிவம் மத்திய மாநில அரசுகளுக்கானது தயாராக வந்து விடும். கட்டவேண்டிய வரியினைக் கட்டி படிவத்தினை தாக்கல் செய்து விடலாம். இதற்கு சிறிய வணிகர்களுக்கு இரண்டு நாட்களும் பெரிய வணிகர்களுக்கு அதிக பட்சம் ஐந்து நாட்களும் போதுமானது. தற்போதைய முறையில் வணிகர்கள் 1ந் தேதி முதல் படிவம் கொடுக்க வேண்டிய கடைசி நாள் எதுவோ அது வரையில் எந்த தேதியிலும் படிவத்தை கொடுத்து தமது கடமையினை நிறைவேற்றி விடமுடியும். யாரையும் எதற்கும் எதிர்பார்க்க வேண்டியதில்லை.
ஆனால் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு விநியோகஸ்தரும் அடுத்த மாதம் 10ந் தேதிக்குள் தமது சரக்கு விநியோகம் அல்லது சேவை விநியோகம் அல்லது இரண்டும் சேர்த்து உள்ள விவரங்களை இணைய தளத்தின் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாதத்தில் சரக்கு விநியோகம் அல்லது சேவை விநியோகம் எதுவும் இல்லையென்றால் கூட ஜிஎஸ்டிஆர் 1 படிவத்தில்
“இல்லை” என குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். அதே போல வரி செலுத்துபவர் சரக்கு அல்லது சேவை பெறாமல் இருந்தால் கூட 11ந் தேதிவரை சரக்கு வரவு அல்லது சேவை வரவு விபரங்கள் சரி பார்க்க தாமதிக்க வேண்டும். முழுமையான சரக்கு மற்றும் சேவை வரிக்கான படிவம் 15ந் தேதிக்குப் பின்னர் 20 தேதிக்குள் தான் தாக்கல் செய்ய முடியும். இவற்றில் காலதாமதம் ஏதும் இருப்பின் காலதாமதம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தினமும் ரூ.100 வீதம் எத்தனை நாட்கள் தாமதமோ அத்தனை நாட்களுக்கு கணக்கிடப்படும். ஒவ்வொரு வரி செலுத்துபவரும் தாமாகவே தயாராகும் சரக்கு மற்றும் சேவைகள் பெறப்பட்ட விவரங்கள் வரும் வரையிலும் மற்றும் முழுமையான படிவம் தாமாகவே தயாராகும் வரையிலும் காத்திருந்து தான் ஆக வேண்டும்.
ஒரு விநியோகஸ்தர் முழுமையான கணக்குகளை அடுத்த மாதம் 10ந் தேதிக்குள் தயாரித்தால் மட்டுமே சரக்கு அல்லது சேவை அல்லது இரண்டும் சேர்த்து விநியோகம் செய்த விவரங்கள் 10ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய முடியும். சரக்குகள் வரப்பெற்றது அல்லது சேவைகள் வரப்பெற்றது ஆகிய விவரங்களை தாமாகவே இணையதளத்தில் தயாராகும் விவரங்கள் சரிபார்க்க தேவையான விவரங்கள் முன்கூட்;டியே தயாராக வைத்திருக்க வேண்டும். 15ந் தேதிக்குள் சரக்கு மற்றும் சேவைகள் பெறப்பட்ட விவரங்கள் சரிபார்த்து சரியாக இருப்பின் ஒப்புதல் கொடுத்தால் 20ந் தேதிக்குள் முழுமையான சரக்கு மற்றும் சேவை வரிக்கான மாதாந்திர நமூனா முழமையாக தாக்கல் செய்ய இயலும்.
இதற்கு முந்தைய வரிச் சட்டங்களின் கீழ் படிவம் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதிக்கு முன்னர் எப்போது வேண்டுமானாலும் முழுமையான நமூனா தாக்கல் செய்ய முடியும். ஆனால் தற்போது அமுலுக்கு வருகின்ற சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் சரக்கு மற்றும் சேவை அல்லது இரண்டும் சேர்த்து விநியோகம் செய்த விவரங்களை 10 தேதிக்குள் பதிவேற்றம் செய்து 15 தேதிக்குள் வரப்பெற்ற சரக்கு மற்றும் சேவை அல்லது இரண்டும் சேர்த்து உள்ள தாமாகவே இணைய தளத்தில் தயாராகியுள்ள விவரங்கள் சரிபார்த்து ஒப்புதல் கொடுத்து முழுமையான படிவத்தினை 20ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து அதற்கான வரியினை செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வரி செலுத்துபவரும் முழுமையான வரி செலுத்தும் படிவம் தாக்கல் செய்ய மூன்று நிலைகளில் காத்திருக்க வேண்டும்.
உரிய வரித் தொகை செலுத்தாமல் பதிவேற்றம் செய்யப்படும் படிவங்கள் செல்லாததாகிவிடும்.
அனைத்து பதிவேற்றங்களும் தொடர்புகளும் கடிதங்களும் மின்னஞ்சல் மூலமாகவே நடைபெறும் என்பதால் கையால் எழுதி படிவங்கள் எதுவும் தாக்கல் செய்ய முடியாது.
இந்த வலைப்பதிவினை ஆங்கிலத்தில் காண்பதற்கும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் உள்ள இன்னும் பல தகவல்களையும் கண்டறிய கீழ்க் காணும் இணைப்பினை அழுத்தவும்.
PLEASE
USE SOCIAL MEDIA BUTTONS TO SHARE THE BLOGSPOT ARTICLES
PLEASE
USE SOCIAL MEDIA BUTTONS TO PRINT THE ARTICLES IF NEEDED
HOW
TO USE: Please click + Button on the left side social media buttons of
this blogspot. A new window will
appear without side banners and heading and footer. Take print out of the “ABHIVIRTHI”
articles needed if necessary and use minimum number of papers and save money.
|